நீண்ட இடைவெளிக்கு பிறகு கிடைத்த வாய்ப்பை கச்சிதமாக பயன்படுத்திக் கொண்ட 3 நடிகர்கள்..!

அருண் விஜய்

இவர் 1995 -ல் திரைத்துறைக்கு வந்தாலும் இவரால் பெரிய வெற்றி படத்தை கொடுத்து முன்னணி நடிகராக வர முடியவில்லை.

Advertisement

பொறுமையாக இவருக்கான வாய்ப்பிற்காக காத்திருந்து உடலை மெருகேற்றி நல்ல கதைகளை புது இயக்குநர்களிடம் தேடினார்.

2012-ல் வெளிவந்த “தடையற தாக்க” படமும் “என்னை அறிந்தால்” படத்தில் வில்லனாக நடித்த “விக்டர்” கதாபாத்திரமும் இவருக்கு ரசிகர்களிடம் நல்ல பெயரை வாங்கி கொடுத்தது.

இதன் பிறகு குற்றம் 23 ,செக்க சிவந்த வானம், தடம் என நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து மக்களை கவரும் வகையில் நடித்து திரைத்துறையில் முன்னேறி கொண்டிருக்கிறார்.

அரவிந்த்சாமி

1992 -ல் வெளியான ‘ரோஜா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு வந்தார். இவர் அன்றைய பெண்களின்”கனவு கண்ணனாக ” திகழ்ந்தவர்.

2006 -ஆம் வருடம் வரை திரைப்படங்களில் நடித்து வந்த இவர் அதன் பிறகு 7 வருடங்கள் எந்த படத்திலும் நடிக்கவில்லை.

2013-ல் ரீ என்ட்ரி கொடுத்த போது மணிரத்னத்தின் “கடல்” படம் ஏமாற்றினாலும் 2015-ல் வெளிவந்த “தனி ஒருவன்” படத்தின் வில்லன் கதாபாத்திரத்தின் மூலம் கிடைத்த வாய்ப்பை கச்சிதமாக பயன்படுத்தி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி மக்களின் மனதை கவர்ந்தார்.

“சீயான்” விக்ரம்

தன்னம்பிக்கை,விடா முயற்சி இவற்றின் மறு உருவமாக கடவுள் படைத்த ஒரு அற்புதமான மனிதன்.

இவரின் நிலையில் யார் இருந்தாலும் வாழ்க்கையில் இவ்வளவு பொறுமைசாலியாக இருப்பார்களா என்பது சந்தேகமே.

சேது படத்தின் மூலம் தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி இன்று தமிழ் திரைத்துறையில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர்.